விஜய் நல்லவர்!.. தில்லானவர்!.. பேட்டு எடுத்த பத்திரிக்கையாளர் டிவிட்!....
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் வாழ்க்கையை கரூர் சம்பவம் புரட்டிப் போட்டது. ஒரு பக்கம் விஜய் கட்சி தொடங்குவதிலிருந்து யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை.. செய்தியாளர் சந்திப்பும் அவர் நடத்தியதில்லை.. தமிழக அரசியலில் ஏன் உலக அரசியல் கூட செய்தியாளர்களை சந்திக்காமல் அரசியல் நடத்தும் ஒரே நபர் விஜய்தான் என பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.. விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.. ஆனால் விஜய் வழக்கம் போல் எந்த பதிலும் செல்லாமல் மௌனமாகவே இருக்கிறார்.
இந்நிலையில்தான், NDTV தொலைக்காட்சிக்கு விஜய் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.. நான்கு பேர் கொண்ட குழு விஜயை சந்தித்து பல கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள்.
சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்திருப்பது சுலபம் அல்ல.. அரசியல்தான் என் எதிர்காலம்.. குறுகிய கால அரசியல் செய்ய நான் வரவில்லை.. அரசியலில் நீண்ட தூரம் பயணிப்பேன்... கரூர் சம்பவம் என்னை மனதளவில் பாதித்திருக்கிறது.. அது இப்பொழுதும் என்னை துரத்துகிறது. அப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை..
கிங் மேக்கராக இருப்பதற்காக நான் அரசியலை தேர்ந்தெடுக்கவில்லை.. களத்தில் இறங்கி வெற்றி பெறுவதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.. தெளிவாக முடிவெடுத்துதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.. அரசியலுக்கு வர வேண்டும் என்பது நான் இப்போது எடுத்த முடிவு அல்ல என்றெல்லாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் விஜய்.. இந்த பேட்டி தொடர்பான செய்திகளை பல ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன..
இந்நிலையில் விஜய் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான வதா வேணுகோபால் தவெக தலைவர் விஜயை சந்தித்தேன்.. 2026 தேர்தலில் அவர்தான் X Factor.. நல்ல மனிதர்.. நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்.. அவரிடம் தைரியம் இருக்கிறது.. கேம் ஸ்டார்ட். என பதிவிட்டிருக்கிறார்.