தொடர்புடைய செய்திகள்
- அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படாது - பள்ளிக் கல்வித்துறை
- அதிமுக கட்சியின் முதல் எம்.பி மாயத்தேவர் காலமானார்! - அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!
- நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: புரமோஷன் வீடியோவை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்!
- சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்! – தமிழக அரசு புதிய உத்தரவு!
- வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… நாளை சென்னை போக்குவரத்தில் மாற்றம்!
சினிமாவ விட இது வித்தியாசமா இருந்துச்சு.. எனக்கு இது புதுசு! – செஸ் ஒலிம்பியாட் குறித்து விக்னேஷ் சிவன்!
சென்னையில் நடைபெற்று முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியை இயக்கியது குறித்து இயக்குனர் விக்னேஷ்சிவன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை இயக்கி நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த அனுபவம் குறித்து பேசியுள்ள விக்னேஷ் சிவன் “திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். ஆனால் நேரடி ஒளிபரப்பு என்பது திரைப்படங்களை விட வித்தியாசமானது. எனக்கு நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்கூட்டிய அனுபவங்கள் கிடையாது. இதுவே முதல்முறை. நல்ல டீம் இருந்ததால் சிறப்பாக செயல்பட முடிந்தது” என கூறியுள்ளார்.
