1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (08:30 IST)

இந்தியர்களுக்கு சிறப்பு ராமாயண சுற்றுலா ரயில்! – பக்கா ப்ளான் போட்ட இலங்கை!

Srilanka
இலங்கையில் உள்ள ராமாயண புகழ்பெற்ற பகுதிகளை சுற்றி காட்ட இந்தியர்களுக்கு சிறப்பு ரயில் சேவையை தொடங்குவதாக இலங்கை அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, ஆட்சி கலைப்பு ஆகியவற்றால் ஸ்திரத்தன்மை இழந்து தத்தளித்த இலங்கை மெல்ல பிரச்சினைகளை சரிசெய்து வருகிறது. நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ள நிலையில் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்படுவதுடன், பொருளாதாரத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் முதுகெலும்பாக திகழும் சுற்றுலா துறையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை கவர்வதற்காக “இந்தியர்களுக்கு சிறப்பு ராமாயண சுற்றுலா ரயில் சேவை”யை இலங்கை சுற்றுலா துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ரயில் இலங்கையில் ராமாயண சிறப்பு கொண்ட பகுதிகள், ஸ்தலங்கள் என மொத்தம் 52 பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும். மேலும் ஒரு ஆண்டில் பல முறை இலங்கை பயணிக்கும் வகையிலான விசாவை வழங்கவும் இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.