திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:56 IST)

அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படாது - பள்ளிக் கல்வித்துறை

புலம்பும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு  விருதுகள் வழங்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை  முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
 
இந்த தினத்தன்று  நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறும் அசிரியர்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
அதில், அரசியல் கட்சிகளுடம் தொடர்பில் இருந்தால் விருது பரிந்துரையில் இடம்பெறாது. வணிக ரீதியில் கற்பிக்கும் ஆசிரியர்களும் விருது பெறத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.