தொடர்புடைய செய்திகள்
- பல்லுப்போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிக்கிறார்கள்.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..!
- கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு.. இந்த ஆண்டு முருகனுக்கு மாநாடு.. அண்ணாமலை
- மதத்தை வளர்ப்பது அரசின் வேலை இல்லை.. முத்தமிழ் முருகன் மாநாடு தவிர்க்கப்பட வேண்டும்! - சிபிஎம் பாலகிருஷ்ணன் கருத்து!
- ரூ. 5,570 கோடி கோவில் நிலங்கள் மீட்பு.! முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் பேச்சு.!
- முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கலந்துகொள்ளவில்லை? தமிழிசை
முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்.. விசிக எம்பியின் எக்ஸ் பதிவு..!
பழனியில் முருகன் மாநாடு சிறப்பாக நடைபெற்ற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்
முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும்.
முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும்.
ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து அடையாளத்துக்குள் நீண்ட காலத்திற்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்து படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.
அப்படி பக்தர்கள் இப்போது படையிலிட முடியாது. முருகனும் மற்ற தமிழ்க் கடவுள்களும் இந்து அடையாளத்துக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டனர்.
Edited by Siva
