1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (10:56 IST)

முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கலந்துகொள்ளவில்லை? தமிழிசை

பழனியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஏன் கலந்து கொள்ளவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
உலகலாய முத்தமிழ் முருகன் மாநாடு இன்று பழனியில் சிறப்பாக தொடங்கப்பட்டது என்பதும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த மாநாட்டை சென்னையில் இருந்து காணொளி மூலம் சற்று முன் தொடங்கி வைத்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஏன் கலந்து கொள்ளவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கேள்விகளுக்கு உள்ளார். உலக அளவிலான முருகன் மாநாட்டில் முதலமைச்சர் நேரில் கலந்து கொண்டிருக்க வேண்டும், மற்ற மத நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்ளும் முதல்வர் முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran