செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:36 IST)

கொலை செய்துவிட்டு சிறைக்குள் சொகுசு வாழ்க்கை! - நடிகர் தர்ஷனின் சிறை புகைப்படங்கள் வைரல்!

Actor dharshan

ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறை சென்ற நடிகர் தர்ஷன் அங்கு சொகுசாக இருப்பதாக வெளியான புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கன்னடத்தில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவரது தோழியான நடிகை பவித்ரா கவுடாவிற்கு, தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி என்பவர் மோசமான மெசேஜ்களை அனுப்பி திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசுவாமியை கொடூரமாக கொன்று தனது தோட்டத்திலேயே புதைத்துள்ளார்.

 

இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் தர்ஷன் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தர்ஷன் அங்கு சொகுசான சிறை வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த புகைப்படத்தில் தர்ஷன் டீ சர்ட் அணிந்து ஜாலியாக காபி குடித்துக் கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல சமீபத்தில் அவர் வெளியே உள்ள நபர் ஒருவருடன் வீடியோ கால் மூலமாக பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. கொலை வழக்கில் சிறை சென்ற ஒருவர் இவ்வளவு சொகுசாக இருப்பதற்கு சிறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்திருப்பார். அவர்களும் இதற்கு உடந்தை என பல கண்டன குரல்கள் எழத் தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K