1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vairamuthu request tn govt for bharathiraja

முதல்வர் விஜயை சந்திக்க தயங்க மாட்டேன்.. வைரமுத்து டிவிட்!...

vairamuthu
பாரதிராஜாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் கவிஞர் வைரமுத்து. வைரமுத்து எழுதிய முதல் பாடலான ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் இடம் பெற்றது பாரதிராஜா இயக்கிய நிழல்கள் திரைப்படத்தில்தான். அப்போது முதலே இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.

அந்த நட்பு கடைசிவரை நீடித்தது. சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.  பாரதிராஜா மரணித்தது முதல் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை கவிஞர் வைரமுத்து உடன் இருந்தார். பாரதிராஜாவின் விருப்பப்படி அவரின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்ற வைரமுத்து ஒரு கவிதையை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘இந்த மண்ணகத்தில் உனக்கொரு ஒரு மணி மண்டபம்.. அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.. முதலமைச்சர் விஜயை சந்திக்கவும் தயங்க மாட்டேன்.. இந்த இடம் கலைக்கோயிலாக என்று கட்டப்படுமோ அன்று தேனி மாவட்டம் முழுக்க தேவர்கள் பூச்செறிவர்’ என பதிவிட்டிருக்கிறார்.