1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. elan musk says ai will control human soon

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

elan muski
கடந்த சில வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் AI சாஃப்ட்வேர் துறையில் பிரபலமாகி வருகிறது. அதோடு, தவிர்க்க முடியாத ஒன்றாகவும் மாறிவிட்டது. சாஃப்ட்வேர் துறையில் எழுதப்படும் கோடிங்கை AI சுலபமாக செய்து விடுகிறது.

எனவே சாஃப்ட்வேர் துறையில் எதிர்காலத்தில் மனிதர்களை விட AI அதிக ஆதிக்கம் செலுத்தும் என சொல்லப்படுகிறது. எனவேதான் உலகம் முழுவதும் கல்லூரிகளில் AI தொடர்பான பாடங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் AI தொடர்பான படிப்புகளை மிகவும் ஆர்வமாக படிக்கிறார்கள்.

இந்நிலையில்தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் ‘இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் AI - யிடம் தங்கள் கட்டுப்பட்டை இழப்பார்கள். 2036ம் வருடத்திற்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும்.. அதேநேரம் மனிதகுலத்தை AI அழிப்பதற்கு 10 முதல் 20 சதவீதம் வரை வாய்ப்புகள் இருக்கிறது’ எனவும் அவர் பகீர் கிளப்பினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..