கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..
கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து கனிமவள பொருட்களை கொண்டு செல்வதற்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. நமது மாநிலத்தில்தான் எழுபது முதல் தொண்ணூறு சதவீத கட்டுமான பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அண்டை மாநிலத்தில் கட்டுமான பணிகள் முடங்கியுள்ள நிலையில், தடையை நீக்க கோரி கேரளா அரசு தமிழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாகவே இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏராளமான மலைகள் இருந்தபோதிலும், அங்கே குவாரிகள் அமைத்து கனிமங்களை வெட்டி எடுக்காமல், தமிழகத்து மலைகளை குறிவைத்துச் சுரண்டுவதையே அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். நம்முடைய இயற்கை வளங்களும் சுற்றுச்சூழல் அமைப்பும் முழுமையாக அழிந்தாலும் பரவாயில்லை என்ற சுயநல போக்கே இதன் மூலம் வெளிப்படுகிறது. தமிழகத்தின் இயற்கை செல்வங்களைப் பாதுகாப்பதுதான் முதல் கடமையாகும்.
எனவே, கேரளா அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தை ஒருபோதும் பொருட்டாகக் கருதாமல், கனிமவளக் கடத்தலுக்கு எதிரான இந்தத் தடையைத் தமிழக அரசு உறுதியுடன் தொடர வேண்டும் என்று நெட்டிசன்கள் கேட்டு கொண்டுள்ளனர். நமது வளங்களைச் சூறையாட அனுமதிக்கும் முந்தைய காலத்து ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தமிழர்களின் சொத்துகளைப் பாதுகாக்கும் இந்த அதிரடி நடவடிக்கையைத் தவெக அரசு மேலும் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
Edited by Siva
