1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. bharathira raja brother thanked cm vijay

அந்த மனுஷன் மட்டும் அத செய்யலனா!.. விஜய்க்கு நன்றி சொன்ன பாரதிராஜா தம்பி!..

bharathi raja
16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. திரைப்படங்களை இப்படி கூட எடுக்க முடியுமா என பல இயக்குனர்களுக்கும், ரசிகர்களுக்கும் காட்டியவர் இவர். கிராமத்து மனிதர்கள் வாழ்வியலை அப்படியே திரைபப்டங்களில் பதிவு செய்தவர் இவர்.

பாரதிராஜா இயக்குனராக வெற்றி பெற்ற பிறகுதான் இயக்குனராகும் ஆசையில் கிராமங்களிலிருந்து பலரும் புறப்பட்டு சென்னைக்கு வந்தார்கள். வெற்றிபெற்றும் காட்டினார்கள்.  கோலிவுட்டில் பல புதிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை பாரதிராஜா அறிமுகம் செய்திருக்கிறார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். தமிழில் முக்கியமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது திரைப்படங்களில் காதல், சாதி, மத பிரச்சனைகளை அலசியிருக்கிறார்..

சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். அவரின் விருப்பப்படி தேனியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு பாரதிராஜாவின் உடலுக்கு அரசு மரியாதையும் கொடுத்தது. எனவே, 72 குண்டுகள் முழுங்க அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் ‘அண்ணனை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ததற்கு முக்கிய காரணம் முதலமைச்சர் சார்தான். அவர்தான் அதற்கான ஏற்பாடு செய்தார். அதற்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் ஈடாகாது. அந்த மனுஷன் மட்டும் அதை பண்ணாம இருந்திருந்தால் அன்றைக்கு அங்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கவே முடியாது’ எனக்கூறியிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
’கருப்பு’ பிரச்சனையில் இருந்தபோது சூர்யாவும் உதவவில்லை.. லோகேஷும் உதவவைல்லை.. ஹெச். வினோத் தான் உதவினார்...