1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin comment about cm vijay

சபாநாயகர் டைரக்டர்.. முதல்வர் நடிகர்!.. சட்டசபையை தியேட்டராக்கிட்டாங்க!.. உதயநிதி நக்கல்!..

udhyanidhi
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் தவெக அரசுக்கு எதிராக வைத்த பல குற்றச்சாட்டுகளுக்கு இன்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பதில் கூறினார். அப்போது திமுக அரசை அவர் விமர்சித்து பேசினார். சட்டம் ஒழுங்கு போதைப்பொருள் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் திமுக அரசுதான் காரணம்..

அதை அவர்கள் தடுக்க தவறியதால்தான் இப்படி வந்து நிற்கிறது.. நாங்கள் அதை சரி செய்து கொண்டிருக்கிறோம்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என்கிற பெயரில் கோடி கோடியாக கொள்ளையடித்தார்கள். அதை நாங்கள் தடுத்திருக்கிறோம் என விஜய் பேச கோபமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் உதயநிதி பேசியவதாது:

முதல்வர் விஜய் சட்டசபையிலும் நடிக்க துவங்கிவிட்டார். எழுதி கொடுத்த டயாலாக் பேப்பரை 2 நாட்களாக மனப்பாடம் செய்து அப்படியே வந்து பேசுகிறார். சபாநாயகர் ஆக்சன் சொல்கிறார்.. முதல்வர் நடிக்கிறார்..அமைச்சர்கள் எல்லாம் உதவி இயக்குனர் போல செயல்படுகிறார்கள். முதல்வர் சைகையெல்லாம் செய்கிறார்.. சபாநாயகர் ஆக்சன் கட் சொல்கிறார். ஒன்ஸ் மோர் கூட போவார்கள் என நினைக்கிறேன்..

சட்டசபையை தியேட்டராக மாற்றி விட்டார்கள். விசிலெல்லாம் அடிக்கிறார்கள். ஐட்டம் டேன்ஸ் எல்லாம் ஆடுவாரக்ள் போல.. ஆக்சன் என சொன்னால் நடிப்பது போல் மனப்பாடம் செய்தவற்றை முதல்வர் பேசினார். இனி மேக்கப் மேன், ஸ்டண்ட் மாஸ்டர் எல்லாம் வந்து விடுவார்கள்.. பொதுக்கூட்டத்தில்,  பிரச்சாரத்தில் பேசுவது போல் சட்டமன்றத்தில் பேச முடியுமா?.. அதை நாங்கள் கேட்க வேண்டுமா?’ என உதயநிதி கேள்வி எழுப்பினார்..

செய்தியாளர்களை பார்த்தால் முதல்வர் ஓடுகிறார். ஷுட்டிங் மைண்ட் செட்டிலேயே முதல்வர் சட்டமன்றத்திலும் இருக்கிறார்.. ஆதாரம் இல்லாமல் முதல்வர் பேசினார்.. அதற்காக எழுந்து பேச எங்களை சபாநாயகர் அனுமதிக்கவில்லை.. அதனால் வெளியேறினோம். பல அமைச்சர்கள் மாறி மாறி பதில் அளித்தனர்.. முதல்வரிடம் கேட்டால் அவர் பதில் அளிக்கவில்லை.

கட்சி நிதி என்று முதல்வர் பேசினார். அது எந்த கட்சி என தைரியமாக சொல்ல சொல்லுங்கள்.. நாங்கள் ஊழல் செய்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.. நாங்கள் நிரூபிக்கிறோம். எதற்கெடுத்தாலும் திமுக மீது பழி போடுவதே இந்த அரசு வழக்கமாக வைத்திருக்கிறது’ என அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்
OTT-யில் கருப்பு ஓடாததுக்கு இதுதான் காரணம்!.. Sorry கேட்ட ஆர்.ஜே.பாலாஜி!..