1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor rajinikanth not wishing cm vijay

முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ரஜினி!.. அதுதான் காரணமா?..

rajini vijay
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய். விஜய் முதலமைச்சரானது திரையுலகில் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒரு சிலருக்கு அது பொறாமையையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜயை பிடிக்காத பலருக்கும் விஜய் முதல்வரானதும் பிடிக்கவில்லை. ஆனாலும் அது மக்கள் தீர்ப்பாக மாறிவிட்டது. விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்..

இந்நிலையில்தான், முதல்வர் விஜய் நேற்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல், திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகளும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்கள். ஆனால் வழக்கமாக தமிழக முதலமைச்சருக்கு பிறந்தநாள் என்றால் வாழ்த்து சொல்லும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று விஜய்க்கு எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை..

விஜய் முதல்வரான போதும் கூட ரஜினி அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை இதையடுத்து விஜயின் வளர்ச்சியை பார்த்து ரஜினிக்கு காழ்ப்புணர்ச்சி, பொறாமை, ரஜினியால் செய்ய முடியாததை விஜய் செய்து காட்டிவிட்டார்.. அந்த பொறாமையில்தான் ரஜினி விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை’ என்றெல்லாம் விஜய் ரசிகர்களும், தவெகவினரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். இந்த நிலையில்தான் நேற்று முதல்வர் விஜய்க்கு ரஜினி வாழ்த்து சொல்லாததும் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.