எந்த ஆதரவும் இல்லை!.. தனியா ஜெயிச்சா வந்திருக்கார் விஜய்!. ஷோபா சந்திரசேகர் உருக்கம்!...
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார் விஜய். கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதெல்லாம் தமிழக அரசியலில் சாதாரண ஒன்றில்லை. மக்களின் பெரு ஆதரவு இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும். விஜய்கு அது கிடைத்திருக்கிறது.
இந்நிலையில்தான், முதல்வர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் 2023ம் வருடம் என்னையும், அவரின் அப்பாவையும் அவரின் அலுவலகத்திற்கு அழைத்து நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று சொன்னார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சினிமா வேறு.. அரசியல் வேறு.. நன்றாக யோசித்துக் கொள் என்று நான் சொன்னேன்.
அம்மா நான் முடிவு செய்து விட்டேன் என உறுதியாக சொன்னார். அவர் அப்படி சொன்ன பிறகு அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை . விஜய் அரசியலுக்கு வந்தபோது சினிமா உலகிலிருந்து அவருக்கு ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. அங்கிருந்தே கூட பல எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்தது. அதேபோல் அரசியலிலும் அவரை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். சில சம்பவங்கள் நடந்தபோது அவர் மிகவும் கஷ்டப்பட்டார். உடைந்து போனார். ஆனாலும் சில நாட்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார். அப்போதெல்லாம் தவறான தவறான முடிவை எடுத்து விட்டாரோ என்று நான் ஒரு தாயாக பயந்தேன். ஆனால் அதையெல்லாம் தாண்டித்தான் தற்போது அவர் வெற்றி பெற்று காட்டியிருக்கிறார்.
விஜயை பொறுத்தவரை அவர் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு அவர் எந்த பதிலும் சொல்ல மாட்டார். அவருக்கு விவாதங்களே பிடிக்காது.. எதுவாக இருந்தாலும் செயலில் காட்ட வேண்டும் என்று மட்டுமே அவர் நினைப்பார்.. அதுதான் அவரின் குணம்.. அவர் எப்போதும் அப்படித்தான் என்று சொல்லியிருக்கிறார்.