தொடர்புடைய செய்திகள்
- உயிரிழப்பை வேடிக்கை பார்க்காமல் உண்மையை சொல்லுங்கள்! – திமுகவுக்கு எடப்பாடியார் கோரிக்கை!
- நீட் தேர்வால் அரியலூரில் அடுத்த உயிர் பறிபோனது !
- வெற்றிமாறன், விஜய்சேதுபதி, பாண்டிராஜ் குறித்து ஹர்பஜன்சிங் டுவிட்!
- நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வாய்ப்பே இல்லை: சட்டவல்லுனர்கள்
- மகன் கார் விபத்து குறித்து வானதி சீனுவாசன் பதிவு செய்த டுவிட்!
நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே: உதயநிதி டுவிட்
நீட் தேர்வு என்பது துரோகமும் சூழ்ச்சியும் மட்டுமே என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
நீட்தேர்வு நேற்று முன்தினம் நடந்த நிலையில் நீட் தேர்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
நீட் தேர்வு எழுதிய அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் அரசியல்வாதிகளே காரணம் என சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் கனிமொழி தற்கொலை குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் - வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது.
அடுத்த கட்டுரையில்
