1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:30 IST)

ஒரு பஸ் ஸ்டாப் கட்ட ரூ.1.54 கோடியா? கனிமொழிக்கு காயத்ரி கேள்வி

ஒரு பஸ் ஸ்டாப் கட்ட ரூ.1.54 கோடியா? கனிமொழிக்கு காயத்ரி கேள்வி
தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி அவர்கள் சமீபத்தில் தூத்துக்குடியில் பஸ் ஸ்டாப் ஒன்றை திறந்து வைத்த நிலையில் இந்த பஸ் ஸ்டாப் கட்ட ரூபாய் 1.54 கோடியா என நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்
 
எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிழற்குடை அமைக்க 1.54 கோடி என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவரான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். இதைக் கட்டுவதற்கு 1.54 கோடி ரூபாய் செலவாகி உள்ளதா என்றும் அவர் கனிமொழியின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கனிமொழி திறந்து வைத்த பஸ் ஸ்டாப்பின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் நெட்டிசன்கள் இந்த பஸ் ஸ்டாப்பை ஒரு சில ஆயிரங்களில் கட்டிவிடலாம் இதற்கு போய் 1.54 கோடியா என்று கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்