1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (08:50 IST)

நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வாய்ப்பே இல்லை: சட்டவல்லுனர்கள்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என சட்டமன்றத்தில் நேற்று மசோதா இயற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வாய்ப்பே இல்லை என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
மத்திய அரசு இயற்றிய ஒரு சட்டத்திற்கு எதிராக மாநில அரசு சட்டமன்றத்தில் மசோதா இயற்ற முடியாது என்றும் மத்திய அரசின் ஆலோசனையை கேட்டு ஒப்புதல் வழங்கி வரும் ஜனாதிபதி கண்டிப்பாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஒரு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு மாநிலங்களில் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆனால் தமிழகம் மட்டுமே இயற்றப்பட்டு இருக்கும் இந்த மசோதா ஒப்புதல் பெற வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
மேலும் நீட் தேர்வுக்கு அரசியல்வாதிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் மாணவர்கள் ஆசிரியர் கல்வியாளர்கள் பெற்றோர்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்