திருச்சி திமுக மாநாட்டில் 2 பேர் மரணம்?!.. அதிர்ச்சி தகவல்!..
சமீப காலமாகவே தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் வெயில் தாங்க முடியாமல் சிலர் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரைப் பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்/ இது தவெகாவுக்கு கரும்புள்ளியாக அமைந்தது..
அதேபோல் விஜய் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது வெயில் தாங்க முடியாமல் வடமாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் மயங்க்கி விழுந்து உயிரிழந்தார்.
அதேபோல் உதயநிதி கலந்த கண்ட திமுக பொதுக்கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார்..
இந்நிலையில்தான், சமீபத்தில், திமுக தலைவரும், முதல்வருமான் மு.,க.ஸ்டாலின் கலந்து கொண்ட திமுக மாநாட்டில் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது.. புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் மாநாடு திடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்திருக்கிறார்.. அதேபோல் பெரம்பலூரை சேர்ந்த சரோஜா மைதான வாயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்த்தாக சொல்லப்படுகிறது.. ஆனால் மாநாடு முடிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர்தான் இந்த செய்தி வெளியே வந்திருக்கிறது