1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. premalatha vijayakanth is upset with dmk

காங்கிரஸுக்கு அதிக சீட்.. கொஞ்சம் குறைச்சி வாங்கிக்கோங்க!.. அப்செட்டில் தேமுதிக!..

premalatha
2020 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக திமுகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது. அதற்கு முன் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி பேசி வந்தார்.. குறைந்தபட்சம் தங்களுக்கு 10 தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்தார் பிரேமலதா. அவரின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை..

ஒருபக்கம் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வருமா வராதா என்கிற குழப்பம் நீடிக்க வந்தது.. அந்நிலையில்தான் தேமுதிகவை தங்களின் கூட்டணியில் சேர்த்தது திமுக.. அதேநேரம் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என செய்திகள் வெளியாகவில்லை.. அதேநேரம் ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுக்கப்பட்டது.. எனவே பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் எம்பி ஆகவிருக்கிறார்.

இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.. ஒருவேளை கூட்டணியிலிருந்து காங்கிரஸ் சென்று விட்டால் என்ன செய்வது என கணக்கு போட்டுதான் தேமுதிக கூட்டணியில் சேர்த்திருக்கிறது திமுக. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 28 சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.. எனவே அதை காரணம் காட்டி தேமுதிகவிடம் ஏற்கனவே ஒதுக்குவதாக சொன்ன சில தொகுதிகளை குறைக்க பார்க்கிறதாம் திமுக.. அது மட்டுமில்லாமல் ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்களை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் சொல்கிறதாம்.

இதில் கடுப்பானதால்தான் பிரேமலதா முதல்வர் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அறிவாலயம் வரவில்லை எனவும், திமுகவுக்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை சீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவும் அவர் வரவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ராகுல் போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...