ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 மார்ச் 2026 (17:15 IST)

பாராட்டலாம்!. ஆனாலும் அரசியல்தான்!.. திமுகவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!..

vijay
நடிகர் விஜய் எப்போது தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறினாரோ அதுமுதலே அவர் எப்போதெல்லாம் பொதுமக்களை சந்திக்க சாலையில் வாகனத்தில் வருகிறாரோ அப்போதெல்லாம் அவரின் வாகனத்தின் எல்லா பக்கங்களிலும் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் அவரை விரட்டி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. விஜயை எப்படியாவது அருகில் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவர்கள் உயிர் பயம் இன்றி ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக பலரும் விஜயின் வாகனத்துக்கு முன்னே சென்று செல்போனில் செல்பி எடுக்கிறார்கள்..

என் பின்னால் அப்படி வர வேண்டாம் என வேலூரில் விஜய் கோரிக்கையும் வைத்தார்.. ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை.. சமீபத்தில் தஞ்சாவூருக்கு விஜய் வந்தபோது அதுபோலவே கல்லூரி மாணவர் ஒருவர் விஜயின் வாகனத்தையோட்டி இருசக்கர வாகனத்தில் வந்த போது விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் தந்தை ஊடகங்களில் பேசியபோது ‘41 பேர் உயிரிழந்ததற்கே போகாதவர்கள் என் மகனுக்கு எப்படி வருவார்கள்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்..
vijay

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.. அதோடு மருத்துவ செலவை தான் ஏற்படதாகவும் கூறியிருந்தார்.. இது தொடர்பான புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து  ‘தவெக நிர்வாகிகள் செல்லவில்லை... விஜய் செல்லவில்லை.. ஆனால் திமுகதான் மக்களுக்கு உதவுகிறது’ என திமுகவினர் பதிவிட்டு வந்தார்கள்..

ஆனால், இதை பாராட்டலாம் என்றாலும் நாங்குநேரியில் சாதி வெறி ஆட்டத்தில் காயம்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எவரையும் எந்த அமைச்சரும் சந்திக்கவில்லை.. திமுகவின் கரிசனமும்.. கவலையும். மக்கள் மீதான அக்கறையும் குறிப்பிட்ட சில சம்பவங்களுக்கு மட்டும் வருவது ஏன்?.. இது அக்கறை இல்லை.. முழுக்க முழுக்க அரசியல் என திமுகவை பிடிக்காதவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.