திருச்சியில் NDA பொதுக்கூட்டம்!. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுப்பாரா மோடி?..
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். ஏற்கனவே மதுராந்தகம், மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நடந்த பொதுக்கூட்டங்கள் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அந்த மேடைகளில் பேசும் போது திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினர் மோடி.. திமுக ஊழல் செய்து வருகிறது.. மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்.. இங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்,.
அவரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் காவிக்கு எப்போதும் இடம் இல்லை என பிஜேபி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இந்நிலையில்தான் இன்று திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது..
பஞ்சப்பூர் அருகே 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.. 76 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருக்கிறது.. இதில் பல லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.. பாஜக மீது முக ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது..