1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Two district corona virus status

2 மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதார செயலாளர் கடிதம்!

corona
தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து அந்த இரண்டு மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழகத்தில் உள்ள சென்னை செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார் மேலும் இந்த இரண்டு மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவர் அறிவுறுத்தி உள்ளார்
அடுத்த கட்டுரையில்
விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி