1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India Corona cases again going to increase

ஒரே நாளில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு; அதிகரிக்க தொடங்கிட கொரோனா! – இந்திய நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,31,68,585 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,24,651 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,26,22,757 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 21,177 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்; இறுதி ஊர்வலத்திலும் துப்பாக்கிச்சூடு!