திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (11:16 IST)

சோனியாவை தொடந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா! – அதிர்ச்சியில் காங்கிரஸ்!

Priyanka Gandhi
காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக உள்ள சோனியா காந்தியை தொடர்ந்து அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து ராகுல்காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார், இந்நிலையில் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் எம்.பியுமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.