செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (11:24 IST)

இயக்குனர் ஏ எல் விஜய் பெயரில் போலி சமூகவகைதளக் கணக்கு… அவரே அளித்த விளக்கம்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏ எல் விஜய். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வரிசையாக படங்களை இயக்கி வருபவர்.

இயக்குனர் ஏ எல் விஜய் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற படத்தை உருவாக்கினார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸானது. இதையடுத்து அவர் இயக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அவர் பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஒன்று மர்ம நபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக இயக்குனர் ஏ எல் விஜய் அளித்துள்ள விளக்கத்தில் “நான் எந்த சமூகவலைதளங்களிலும் இல்லை. போலி கணக்குகளை பார்த்து ரசிகர்களோ ஊடகங்களோ ஏமாந்துவிட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.