பாஜக குறித்து பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து: ஓபிஎஸ்
பாஜக குறித்து பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து என்றும் கட்சியின் கருத்தல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் பாஜக வளர்வது நல்லதல்ல என்றும் அதிமுக ஓட்டுக்களை தான் பாஜக பிரிக்கின்றது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசினார்
இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
பாஜக குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து என்றும் அது அதிமுகவின் கருத்து அல்ல என்றும் கூறினார்
மேலும் இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்ய உதவிய பாஜக எம்எல்ஏக்களுக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்து கொண்டார்