1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk vijay facing divorce cast today

சங்கீதா தொடர்ந்த விவாகாரத்து வழக்கு!.. நீதிமன்றத்தில் இன்று ஆஜராவாரா விஜய்?..

vijay sangeetha
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி 24ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். விஜய் ஒரு பிரபலமான நடிகராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் இருப்பதால் அது எல்லோராலும் பேசப்பட்டது.

விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதைக் கேட்டபோது தன்னை விஜய் கொடுமைப்படுத்தியதாகவும், பொருளாதாரரீதியாக தன்னை முடக்கியதாகவும், நடிகையிடம் உள்ள தொடர்பை கைவிட்டு விடுகிறேன் என வாக்குறுதி கொடுத்ததாகவும், ஆனால் அதை அவர் பின்பற்றவில்லை எனவும் விவாகரத்துக்கான காரணங்களை சொல்லியிருந்தார் சங்கீதா..

ஆனால், இது ஒன்றும் அவ்வளவு பெரிய ஒர்த்தில்லை என மிகவும் சாதாரணமாக ரியாக்ட் செய்தார் விஜய். அதோடு விவாகரத்து விவகாரம் வெளியாகி சில நாட்களிலேயே நடிகை திரிஷாவைக் கூட்டிக்கொண்டு ஜோடியாக ஒரு திருமணத்திற்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சங்கீதா தொடர்ந்து விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.. முதல் கட்ட விசாரணைக்காக விஜய் நேரில் ஆஜராக வேண்டுமென செங்கல்பட்டு நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருக்கிறது.

ஆனால் விஜய் இன்று திருவள்ளூர், பொன்னேரி, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். எனவே அவர் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள மாட்டார் என்று கணிக்கப்படுகிறது..

அடுத்த கட்டுரையில்
சாலையோர கடையில் பொரி சாப்பிட்ட பிரதமர் மோடி.. ஹெலிகாப்டர் இறங்க முடியாமல் சிக்கல்..!