1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. why vijay not going to kolathur and tiriplicane

கொளத்தூர், திருவல்லிக்கேணி தொகுதி பக்கம் போகாதது ஏன்?.. விஜய் பதில் சொல்வாரா?..

vijay
தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய பின் விக்கிரவாண்டியில் நடந்த முதல் தவெக மாநாட்டில் பேசிய விஜய் ‘திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியே’ என்று பேசினார். தற்போது வரை அதை எல்லா பிரச்சார கூட்டங்களிலும் விஜய் தொடர்ந்து சொல்லி வருகிறார்..

அதோடு எல்லா மேடைகளிலும் திமுகவை மட்டுமே அவர் கடுமையாக விமர்சனமும் செய்து வருகிறார். காரணம் கேட்டால் ‘இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதான்.. மற்ற கட்சிகளைப் பற்றி நாங்கள் தேவைப்படும் நேரத்தில் பேசுவோம்’ என விளக்கம் கொடுக்கிறார் விஜய்..

ஒருபக்கம் ‘திமுகவை தனது எதிரியாக பார்க்கும் விஜய், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய், திமுகவை இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்யும் விஜய், ஏன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் திருவல்லிக்கேணி தொகுதியிலும், முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய செல்லவில்லை?’ என அரசியல் விமர்சிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் இடையேதான் போட்டி என சொல்லும் விஜய் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலேயே அவர் எதிர்த்து போட்டியிட்டு இருக்கலாமே!.. அல்லது குறைந்தபட்சம் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து திருவல்லிக்கேணி தொகுதியில் அவர் போட்டியிட்டு இருக்கலாமே!.. அதை விட்டுவிட்டு ஏன் திருச்சி கிழக்கிலும், சென்னை பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்?’ எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்..
அடுத்த கட்டுரையில்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.. அமைச்சரவை ஒப்புதல்..!