1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy talk about sengottaiyan

அமைச்சர் பதவிக்காக கண்ணீர் விட்டு அழுதவர் செங்கோட்டையன்!.. பழனிச்சாமி ஓப்பன்...

sengottaiyan
எம்ஜிஆர் அதிமுக துவங்கிய காலத்திலிருந்தே அந்த கட்சியில் பயணித்தவர் செங்கோட்டையன். அதன்பின் ஜெயலலிதா நன்மதிப்பைப் பெற்று கோவை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பலமுறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். பலமுறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் யார் அடுத்த முதல்வர் என்கிற பட்டியலில் செங்கோட்டையனின் பெயரும் இருந்தது.. ஆனால் கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக சசிகலா தேர்வு செய்தார்..

ஒருகட்டத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் சொன்னதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் பழனிசாமி. இதையடுத்து தன்னை விஜயின் தவெகவில் இணைத்து கொண்டார் செங்கோட்டையன்.

ஈரோட்டில் நேற்று பிரச்சாரம் செய்த செங்கோட்டையன் பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தான் ‘முதல்நாள் இரவு வரை நான்தான் அடுத்த முதல்வர் என்பது முடிவாகியிருந்தது.. ஆனால் அடுத்த நாள் காலை மாறிவிட்டது. காலில் விழுந்து சரணடைந்து அந்த பதவியை பழனிச்சாமி வாங்கிக் கொண்டார் என்று பேசியிருந்தார்

இந்நிலையில், இதற்கு பிரச்சாரத்தில் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி ‘செங்கோடையன் தானாக எம்.எல்.ஏ ஆகவில்லை. அதிமுக தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த பதவி அது. செங்கோடையன் போன்றவர்களை மன்னிக்க முடியாது. அவர் நன்றி இல்லாதவர். அவரின் மீது அவரின் மனைவியும், மகனும் அம்மா ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தனர். அப்போதுதான் அவர் எவ்வளவு மோசமானவர் என்பது அம்மாவுக்கு தெரிந்தது. உடனே அமைச்சர் பதவியிலிருந்து அவரை தூக்கினார். இவரை கட்சியிலேயே வைத்திருக்கக் கூடாது என அம்மா சொன்னார்.

செங்கோட்டையன் இருந்தவரை யாரும் எம்.எல்.ஏ ஆக முடியவில்லை. நல்ல சட்டை அணிந்தால் கூட அவருக்கு பிடிக்காது. கருணாநிதியின் படத்தை வைத்து சைக்கிள் கொடுத்தபோதே அவர் திமுகவின் பி டீம் என்பதை கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு நீங்கள் அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்றால் யார் கொடுப்பார் என என்னிடம் கெஞ்சு கேட்டு கண்ணீர் விட்டு அழுதவர்தான் செங்கோட்டையன். இன்று ஏதோ உத்தமன் போல பேசிக்கொண்டிருக்கிறார்’ என பேசினார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கணவருடன் சண்டை!. கட்டுகட்டா பணத்தை சாலையில் வீசிய பெண்.. வைரல் வீடியோ...