அஜித் அப்படி சொல்லலயே!.. ஃபேக் நியூஸ்னு தெரியாம!.. ஸ்டாலினை ட்ரோல் பண்ணும் தவெகவினர்!...
தற்போது டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட நிலையில் பலரும் பொய்யான செய்திகளை பரப்புவது அதிகரித்துவிட்டது.
இதில் பிரச்சனை என்னவென்றால் பலரும் அந்த பொய்யான செய்திகளை நம்புகிறார்கள். இந்த செய்தி உண்மையாக இருக்குமா? என அதன் உண்மைத் தன்மையை யாரும் ஆராய்வதே இல்லை. ஒரு செய்தியை பார்த்தவுடன் அது உண்மை என பலரும் நம்பி விடுகிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது..
இந்நிலையில்தான், இன்று சென்னை திருவான்மியூரில் வாக்களிக்க வந்த நடிகர் அஜித்திடம் செய்தியாளர்கள் மாற்றம் வருமா என்று கேட்டதாகவும், அதற்கு No Need- மாற்றம் தேவையில்லை' என பதில் சொன்னதாக செய்திகள் வெளியானது. ஆனால் அப்படி நாங்கள் எந்த செய்தியையும் பதிவிடவில்லை என சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மறுப்பு தெரிவித்தது.
ஆனாலும் விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினரும் தொடர்ந்து இதை தங்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து திமுகவே தொடரட்டும் என்பது போல அஜித் கருத்து சொல்லியிருக்கிறார் என பதிவிட்டு வருகிறார்கள். ஒருபக்கம், அஜித் இப்படி சொல்லி இருக்கிறாரே என செய்தியாளர் முதல்வர் முக ஸ்டாலிடம் கேட்டதற்கு அவர் சரியாகத்தானே சொல்லியிருக்கிறார் என சிரித்துக் கொண்டே பதில் சொல்லிவிட்டு போய்விட்டார் ஸ்டாலின்..
இதையடுத்து இது பொய்யான செய்தி என்று தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கிறார் என தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.