1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk supporters spreading fake news

மாற்றம் தேவையில்லை!.. ஓட்டு போட வந்த அஜித் அப்படி சொன்னாரா?.. நல்லா கிளப்புறாங்க!..

ajith
நடிகர் அஜித்தும் விஜயும் தமிழ் சினிமாவில் சமகாலத்தில் வளர்ந்தவர்கள். இருவருமே காதல் கதைகளில் நடிக்கதுவங்கி ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறியவர்கள். இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் உண்டு.. அதேநேரம் அஜித்தை காட்டிலும் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. அதனால்தான் அஜித்தை விட விஜய் அதிக சம்பளம் வாங்கினார்.

சினிமாவில் அஜித்துக்கும் விஜய்க்கும் இடையே போட்டி இருந்தாலும் நிஜ வாழ்வுகளில் இருவரும் நல்ல நண்பர்களாக அன்போடு பழகி வருகிறார்கள்.. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோது திரை துறையிலிருந்து அவருக்கு வாழ்த்து சொன்னது அஜித் என ஒரு செய்தி உண்டு. ஒரு ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி கொடுத்த போது கூட விஜய்க்கு வாழ்த்துக்களை அஜித் கூறியிருந்தார்..

தமிழகத்தில் இன்று வாக்கு பதிவு நடைபெறும் நிலையில் பெல்ஜியத்திலிருந்து ஓட்டு போடுவதற்காக சென்னை வந்த அஜித் இன்று காலை 6.45 மணிக்கே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், வாக்களித்துவிட்டு திரும்பும்போது அவரிடம் ‘மாற்றம் வருமா?’ என செய்தியாளர்கள் கேட்டதாகவும், அதற்கு அஜித் ‘ No Need.. மாற்றம் தேவையில்லை’ என அஜித் பதில் அளித்ததாக ஒரு செய்தி வெளியானது.. அதை திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் பகிர்ந்து ‘அஜித் மாற்றம் தேவையில்லை’ என சொல்கிறார்.. அதாவது திமுக ஆட்சியே தொடரட்டும் என சொல்கிறார்.. என தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

ajith

ஆனால் இப்படி ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என மாலை முரசு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.. அதாவது பலரும் மாற்றம் வேண்டும் என்பதற்காக விஜய்க்கு வாக்களிப்பதை தடுப்பதற்காகவே சிலர் இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பியது தெரிய வந்திருக்கிறது.