பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்!.. தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!..
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜயின் மக்கள் இயகக்த்தில் பல வருடங்களாக இருந்த பல நிர்வாகிகள் தற்போது எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் மாறியிருக்கிறார்கள். ஒருபக்கம் தவெக ஆட்சி நடைபெறுவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல இடங்களில் தவெக நிர்வாகிகள் அவர்களின் தொகுதியில் வசிக்கும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். மணல் குவாரி உரிமையாளர்களை பணம் கேட்டு மிரட்டுவது உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட அதில் தொடர்புடைய ஒரு கட்சி நிர்வாகி நீக்கப்பட்டார்.
இந்நிலையில்தான், சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் பொக்லைன் ஆபரேட்டரை சிலர் தாக்கிய சம்பவம் வீடியோவாக இன்று காலை சமூக வலைத்தளங்களில் வெளியானது. விசாரணையில் ஆபரேட்டரை தாக்கியது செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட தவெக தொண்டரணி அமைப்பாளர் ஜெய் கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
பெருங்களத்தூர் பாலாஜி நகரில் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அழகு துறை என்பவரை ஜெய் கிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டி தாக்கியது தெரிய வந்திருக்கிறது. அந்த வீடியோ வைரலான நிலையில்தான் அவர் மீது தற்போது தவெக தலைமை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது..