1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. many devotees faint in thirupparankundram temple

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

temple
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. எனவே, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் அந்த கோவிலில் குவிந்தனர். திருவிழாவின் போது மக்கள் வெயிலில் காத்திருந்தனர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் அதில் பலரும் மயக்கமடைந்தனர். எனவே, அவர்கள் அருகில் இருந்த முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு சரியான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என பக்தர்கள் கூறினார்கள்.

திருப்பரங்குன்றம் கோவிலில் விளக்கு ஏற்ற அனுமதி தர வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு பாஜக மற்றும் ஆர்.எஸ்.ஏஸ் இயக்கத்தை சேர்ந்த சிலர் அங்கு சென்றனர். ஆனால், திமுக அரசு அனுமதிக்கவில்லை. இந்த பிரச்சனை நீதிமன்றம் சென்ற பின்னரும் விளக்கு ஏற்றமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.