சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல!.. தவெகவை பொளக்கும் பழனிச்சாமி!...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகிவிட்டார். ஆனால், விஜய் முதல்வராக பொறுப்பேற்றது முதலே ஆட்சியின் செயல்பாட்டை திமுகவும், அதிமுகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
குறிப்பாக ரீல்ஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் எதற்கும் வாய் திறப்பதில்லை. சட்டசபையில் பேசினால் ரீல்ஸுக்காகவே அவர் பேசுகிறார். கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை பெற துப்பில்லை.. அமைச்சர்களுக்கு எந்த அனுபவமும் இல்லை.. விஜயை புகழ்வதே அவர்களுக்கு வேலையாக இருக்கிறது.. சட்டசபையில் முதல்வரிடம் கேள்வி கேட்டால் அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள். அதுவும் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் திமுக மீது பழி போடுவது போல பேசுகிறார்கள் என உதயநிதி தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது எனவும் அவர் கூறி வருகிறார்.
இந்நிலையில், தவெகவின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி குற்றச் சம்பவங்கள் பெருகி வரும் நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த பொய்க்கால் அரசு, ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல் அனுபவமின்மை காரணமாக, கை பிசைந்து நிற்கிறது. இந்த அரசுக்கு சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை என கூறியிருக்கிறார்.