1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk leader vijay requested cbi to postpone inquiry

நாளைக்கு வேண்டாம் ஃப்ளீஸ்!.. சிபிஐ விசாரணைக்கு பயந்தாரா விஜய்!.. டெல்லியில் நடந்தது என்ன?...

vijay
நடிகர் விஜய் அடிப்படையில் ஒரு Introvert. அதாவது யாரிடமும் அதிகம் பேசாதவர்.. தனிமை விரும்பி.. வீட்டில் கூட தனிமையாகவே பல மணி நேரம் செலவழிப்பார்.. உண்மை சொல்லப்போனால் அவர் அதிகம் பேசியதே சினிமாவில்தான். அரசியலுக்கு வந்து விட்டதால் இப்போது மேடைகளில் மட்டும் பேச துவங்கியிருக்கிறார். விஜய் பேசுவதை அவரின் அப்பா எஸ்.ஏ.சி-யே ஆச்சர்யமாக பார்க்கிறார்.

சினிமாவில் நடிக்கும் நடிக்கும் போது கூட படப்பிடிப்புதளங்களில் சக நடிகர்களுடன் அதிகம் பேச மாட்டார் விஜய்.. கேரவனில் இருந்து கீழே இறங்கி வந்து நடித்துவிட்டு மீண்டும் கேரவனுக்கு போய்விடுவார்.. இதுதான் விஜயின் குணம். விஜயோடு நெருக்கமாக பழகியவர்களுக்கு அவரின் குணம் தெரியும்.. விஜய் எதையும் தைரியமாக சந்திக்கும் நபர் கிடையாது.. அதேபோல் எதற்கும் உடனே ரியாக்ட் செய்யும் நபரும் கிடையாது.. மௌனமாக இருப்பார்.. அமைதியாக இருப்பார்.. தனிமையை விரும்புவார்.

ஆனால், அப்படிப்பட்ட குணம் கொண்ட விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பது அவருக்கே பெரிய சவால்தான்.. நேற்று கூட கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் நடந்த சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய்.. அப்போது அவரிடம் பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டு அவரின் பதிலை பதிவு செய்தார்கள்.
vijay

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தபோது அவர்களை தொடர்பு கொண்ட விஜய் ‘என்னையும் கூப்பிடுவார்களா?’ என்று அவர்களிடம் கேட்டதாக அப்போதே செய்திகள் வெளியானது.. ஏனெனில் விஜய் அதை விரும்பவில்லை.. ஏனெனில் அவர் சொகுசாகவே வளர்ந்தவர்.. யாருடைய கேள்விகளுக்கும்  பதில் சொல்லி பழகாதவர்.. விஜய் போன்ற நடிகர்ளுக்கு படப்பிடிப்பு தளங்களில் ராஜா உபசாரம் கிடைக்கும்.. அதை அனுபவித்து வளர்ந்தவர்.. ஒரு குற்றவாளி போல உட்கார வைத்து தன்னிடம் கேள்வி கேட்பதை விஜய் விரும்ப மாட்டார்.. ஆனால் அரசியலுக்கு வந்து விட்டதால் தற்போது சிபிஐ கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

விசாரணை நடந்து கொண்டிருந்தபோது சிபிஐ அதிகாரிகள் விஜய்க்கு உணவு இடைவேளை விட்டபோது ‘சாப்பாடு எல்லாம் எனக்கு முக்கியமில்லை.. நீங்கள் விசாரணை சீக்கிரம் முடியுங்கள்’ என விஜய் கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.. அதேபோல் விசாரணையின் முடிவில் ‘இன்று இந்த கேள்விகள் போதும்.. நாளை வாருங்கள்’ என சிபிஐ அதிகாரிகள் சொன்ன போது ‘இல்லை என்னால் வர முடியாது.. பொங்கலுக்கு பின்னர் கூப்பிடுங்கள்.. நீங்கள் சொல்லும் தேதியில் மீண்டும் வருகிறேன்’ என விஜய் கேட்டதாகவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து தேவைப்பட்டால் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிக்கலாம் என சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்ததாக செய்திகள் கசிந்திருக்கிறது.

விஜய் தைரியமாக டெல்லியில் தங்கி இன்றும் சிபிஐ விசாரணை முழுவதுமாக முடித்து விட்டே சென்னை வந்திருக்கலாம். ஆனால் விஜய் அப்படிப்பட்ட சுபாவம் கொண்ட ஒரு நபர் அல்ல என்கிறார்கள் அரசியல் விமர்சனங்கள். இன்று காலை அவர் சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடி 23தமிழகம் வருகை.. மதுரையில் இருந்து சென்னைக்கு கூட்டம் மாற்றம்..!