திமுக அரசை குற்றம் சொன்ன விஜய்?!.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன?...
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க நேரில் ஆஜராகவேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். அதைத்தொடர்ந்து விஜய் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார். அதன்பின் சிபிஐ அலுவலகத்திற்கு விஜய் சென்றார்.
விஜியிடம் கேட்பதற்காக சிபிஐ அதிகாரிகள் 100 கேள்விகளை தயாராக வைத்திருப்பதாக காலையிலேயே செய்திகள் வெளியானது. குறிப்பாக நீங்கள் ஏன் சென்னையில் இருந்து தாமதமாக கிளம்பினீர்கள்? மதியம் 12:30 மணிக்கு கரூருக்கு வருவதாக அறிவித்துவிட்டு ஏன் இரவு 7.30 மணிக்கு போனீர்கள்?.. போலீசார் சொன்ன கட்டுப்பாடுகளை ஏன் பின்பற்றவில்லை?.. என்பது உள்ளிட்ட பல கேள்விகளையும் அவர் விஜியிடம் கேட்டதாக தெரிகிறது. காலை முதல் மாலை வரை சுமார் ஏழு மணி நேரத்திற்கு மேல் அவர்கள் விஜயிடம் விசாரணை செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளிடம் கரூரில் 41 பேர் உயிரிழ்ந்த சம்பவத்திற்கு தமிழக அரசின் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என விஜய் சொன்னதாக தற்போது செய்திகள் வெளியே கசிந்திருக்கிறது. சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து விஜய் ஒரு வீடியோ வெளியிட்டார். அதிலும் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என எல்லோருக்கும் தெரியும். முதல்வரே.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. என் மக்களை எதுவும் செய்ய வேண்டாம் என ஆளும் திமுகவுக்கு அரசுக்கு எதிராகவே விஜய் பேசியிருந்தார். தற்போது அதே கருத்தைதான் சிபிஐ விசாரணையிலும் விஜய் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ விசாரணை இன்று முடிந்தநிலையில் இன்று டெல்லியில் தங்கும் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.