எங்க பக்கம் வரலனா விஜய்க்குதான் பிரச்சனை!... ஓப்பனா சொல்லிட்டாரே தமிழிசை!...
தமிழக அரசியலில் ஏற்கனவே அதிமுக, திமுக என்ற போட்டி பலமாக இருக்கும் நிலையில் தற்போது புதிதாக விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்கியிருக்கிறது.
விஜய் அடிப்படையில் பல ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் என்பதால் அவருக்கு மக்களிடம் நல்ல ஆதரவும் இருக்கிறது. கரூர் சம்பவத்தின் போது கூட அந்த பகுதி மக்களே விஜய்க்கு ஆதரவாக பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
அந்த நம்பிக்கையில்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் விஜய் இருக்கிறார். அதேநேரம் விஜய்க்கு ஒரு அரசியல்வாதியாக களமாடவில்லை என்கிற புகாரை அரசியல் விமர்சனங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. விஜய் அரசியலற்ற ஒரு அரசியலை செய்து வருகிறார்.. அரசியலுக்கு வந்துவிட்டால் களமாட வேண்டும்.. நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் அரசியல் செய்ய வேண்டும்.. ஆனால் விஜய் அவருக்கு பிரச்சனை வந்தாலே அமைதியாக இருக்கிறார்.. அது அரசியலுக்கு செட் ஆகாது என அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
நேற்று கூட கரூர் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றார் விஜய் நேற்று காலை 11.20 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நுழைந்த விஜய் மாலை 6:30 மணிக்குதான் வெளியே வந்தார்.. கரூர் சம்பவம் தொடர்பாக அவரிடம் பல கேள்விகளை சிபிஐ அவர்கள் எழுப்பியதாக தெரிகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தவெக தலைவர் விஜய் அனுமானங்களின் அடிப்படையில் பலமாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.. நாங்கள் அனுபவம் மற்றும் ஆட்சி அடிப்படையில் பலமாக இருக்கிறோம்.. அனுமானத்தில் பலமாக இருக்கும் அவர் அனுபவத்தில் பலமாக இருக்கும் எங்களுடன் இணைவதே அவருக்கு நல்லது.. இல்லையென்றால் அவருக்குத்தான் பிரச்சனை என பேசியிருக்கிறார்.