1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cbi inquiry with vijay for more than 4 hours

விஜயிடம் 4 மணி நேரமாக சிபிஐ விசாரணை!.. நாளையும் தொடருமா?...

vijay
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கடந்த சில நாட்களாகவே சிபிஐ அதிகாரிகள் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்ற தவெக நிர்வாகிகளையும், கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சிலரையும் நேரில் வரவழைத்து டெல்லியில் உள்ள அலுவலகத்தில் அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பி ஜனவரி 12ஆம் தேதியான் இன்று அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவகத்தில் ஆஜராகவேண்டும் என சொல்ல, இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார் விஜய். அதன்பின் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் சுமார் 100 கேள்விகள் வரை கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக காலையிலேயே செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது 4 மணி நேரத்திற்கு மேல் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று மாலை 6.30  மணி வரை விசாரணை தொடரும் எனத் தெரிகிறது.

அதேபோல் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விஜயியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என செய்திகள் கசிந்திருக்கிறது. முக்கியமாக விஜய் ஏன் ன்னையில் இருந்து தாமதமாக கிளம்பினார்?.. கரூருக்கு ஏன் தாமதமாக வந்தார்?.. போலீசார் சொன்ன எந்த கட்டுப்பாடுகளையும் ஏன் பின்பற்றவில்லை?.. மக்கள் மயக்கம் அடைந்தபோதும், உயிரிழந்த போதும் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் அவரிடம் கேட்டு பதிலை பெற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சிபிஐ விசாரணை ஒத்தி வைப்பு!.. நாளை சென்னை திரும்பும் விஜய்?..