சாப்பாடு வேணாம்!.. நீங்க விசாரணையை சீக்கிரம் முடிங்க!.. விஜய் சொன்னாரா?!...
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்த போது அவரை பார்க்க பலரும் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி மயக்கமடைந்து 41 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது விசாரணை சூடு பிடித்திருக்கிறது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் போன்றவர்களை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள் தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பினார்கள்.
இதனையடுடுத்து இன்று காலை டெல்லி சென்ற விஜய் அங்குள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணையில் ஆஜரானார். அப்போது அவரிடமும் பல கேள்விகளும் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கெல்லாம் விஜய் பதிலளித்தார். காலை தொடங்கிய விசாரணை மாலை 6.30 மணி வரை தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மதிய உணவு எடுத்துக் கொள்ள விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் இடைவெளி கொடுத்த போது எனக்கு மதிய உணவு வேண்டாம்.. விசாரணை சீக்கிரம் முடியுங்கள் என்று விஜய் அவர்களிடம் கேட்டதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.