உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி.. முட்டுக்கட்டை போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, செந்தில் பாலாஜிஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல் செந்தில் பாலாஜிக்கு எவ்வித இடைக்கால உத்தரவோ அல்லது நிவாரணமோ வழங்க கூடாது என்று அந்த மனுவில் வலுவாக கோரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அவர் வகித்த செல்வாக்கை கருத்தில் கொண்டு, விசாரணை பாதிக்கப்பக் கூடாது என்பதில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக உள்ளது.
இந்த நகர்வு செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றத்தில் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் விசாரணையில் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
Edited by Siva
