தொடர்புடைய செய்திகள்
- திமுகவுக்கு 35.8 %.. விஜய்க்கு 19.2 %... வெளியான கருத்துக்கணிப்பு...
- விஜயை நம்பாதீங்க!.. ஓடிப்போய்விடுவார்!. முன்னாள் மேனேஜர் ஆவேசம்!...
- விஜய்க்கு ஓட்டு போடுன்னு சொல்லி அடிச்சாங்க!.. திமுக கட்சியினரை வைத்து நாடகமா?..
- 2% மட்டுமே வித்தியாசம்.. திமுக 32%, தவெக 30%, அதிமுக 28%.. இன்னும் 2 மாதத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு..!
- 50 சீட், ஒரு துணை முதல்வர், 6 அமைச்சர்கள்.. காங்கிரசுக்கு தவெக கொடுத்த கடைசி வாய்ப்பு.. ராகுல் சுதாரிப்பாரா?
ரேம்ப் வாக்.. 234 தொகுதி.. விஜயை காப்பி அடிக்கிறதா திமுக?.. தவெக நக்கல்!...
நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சியை துவங்கினாரோ அப்போது முதலே திமுகவை அதிகமாக விமர்சனம் செய்ய தொடங்கினார். அதேநேரம் அவர் அதிமுக, பாஜக பற்றி அதிகம் பேசவில்லை. எனவே அவர் பாஜகவின் பி டீம் என திமுகவினர் சொன்னார்கள். இதுபற்றி கேட்டால் களத்தில் இருப்பவர்களைப் பற்றிதான் பேசுவோம்.. நேரம் வரும்போது மற்றவர்கள் பற்றி பேசுவோம் என சொல்லியிருந்தார் விஜய்..
மேலும் மேடைகளில் பேசும்போது என்னை வெளியே வா என்கிறார்கள். தேர்தலின் போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விஜய் வெளியே வந்து ஓட்டு போடுவார்.. அப்போது ஏன்டா விஜய் கூப்பிட்டோம்? என நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று கூறினார். மேலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர் என்று நினைத்து நிர்வாகிகள் வேலை பாருங்கள் என்றும் கூறியிருந்தார்..
இந்நிலையில், விஜயின் ஸ்டைலில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியிருக்கிறார்.. நேற்று ஒரு திமுக விழாவில் பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நான்தான் வேட்பாளர் என நினைத்து திமுக நிர்வாகிகள் வேலை பார்க்க வேண்டும்.. திமுக செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேளுங்கள்.. எந்த கட்சியுடன் கூட்டணி? எவ்வளவு தொகுதி பங்கீடு? என்பதை பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள்.. அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என பேசியிருக்கிறார்.
இதையடுத்து எங்கள் தலைவரை (விஜய்) முதல்வர் முக ஸ்டாலின் பின்பற்ற துவங்கியிருக்கிறார்.. சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் கூட எங்கள் தலைவரே போலவே ரேம் வாக் செய்தார். எங்கள் தலைவரை போலவே உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு முன் செல்பி எடுத்தார். இப்போது 234 தொகுதி என்பதிலும் காப்பி அடித்திருக்கிறார்கள் என தவெகவினர் பேச துவங்கியிருக்கிறார்கள்...