50 சீட், ஒரு துணை முதல்வர், 6 அமைச்சர்கள்.. காங்கிரசுக்கு தவெக கொடுத்த கடைசி வாய்ப்பு.. ராகுல் சுதாரிப்பாரா?
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' ஒரு கவர்ச்சிகரமான மற்றும் இறுதியான வாய்ப்பை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய கூட்டணியில் இணைந்தால் காங்கிரஸிற்கு 50 தொகுதிகள், ஒரு துணை முதல்வர் பதவி மற்றும் 6 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என தவெக தரப்பு 'ஆஃபர்' கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு கிடைக்காமல் இருக்கும் காங்கிரஸிற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக கருதப்படுகிறது. திமுக கூட்டணியில் வெறும் ஒற்றை இலக்க வெற்றிகளுடன் நீடிப்பதா அல்லது அதிகார பகிர்வுடன் கௌரவமான ஆட்சியில் அமர்வதா என்பதை ராகுல் காந்தியும், டெல்லி தலைமையும் தான் முடிவு செய்ய வேண்டும்.
காங்கிரசை பொருத்தவரை கூட்டணி குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக தலைமைக்கு இல்லை.. சோனியா, ராகுல், பிரியங்கா என்ன சொல்கிறார்களோ, அதுதான் கூட்டணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva