விஜயை நம்பாதீங்க!.. ஓடிப்போய்விடுவார்!. முன்னாள் மேனேஜர் ஆவேசம்!...
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் குறி வைத்திருக்கிறார். நடிகராக தனக்கு கிடைத்த வரவேற்பு அரசியலிலும் கிடைக்கும் என அவர் நம்புகிறார். அதனால்தான் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார்..
மேலும் கட்சி ஆரம்பித்து பல வருடம் ஆகிவிட்டது போல அவர் அதிமுகவையும், திமுகவையும் கடுமையாகவிமர்சிக்கிறார். அதிமுகவை அடிமை ஊழல் கட்சி என்றும் திமுகவை தீய சக்தி என்றும் பேசி வருகிறார். அவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு விஜய் வெளியே வந்து ஓட்டு போடுவார் என தொடர்ந்து சொல்லி வருகிறார்..
இந்நிலையில், விஜயிடம் 30 வருடங்கள் மேனேஜராக இருந்தவரும், சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவருமான பிடி செல்வகுமார் செய்தியாளிடம் பேசிய போது விஜயை நம்பாதீர்கள்.. விஜய் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்.. அவர் படம் தோல்வி அடைந்தால் அந்த தயாரிப்பாளரை கூட விஜய் சந்திக்க மாட்டார்.. அவரை அப்படியே வெளியே அனுப்பிவிடு என சொல்வார். ஏனெனில் அவருக்கு தோல்வியை பிடிக்காது..
நான் விஜயை நம்பி அவரின் கட்சியின் செலவழிக்கும் நபர்களுக்கு சொல்கிறேன்.. உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்.. தேர்தலில் தோற்றுப் போனால் விஜய் வெளிநாட்டுக்கு போய் விடுவார்.. அவர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்.. அவரை நம்பாதீர்கள் என பேசியிருக்கிறார்..