1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. election poll result in mornign eleven o clock time

தமிழக சட்டசபை தேர்தல்!. 11 மணி வரை 37.56 சதவீத வாக்குப்பதிவு...

vote
தமிழகத்தில் 2026ம் வருடத்திற்கான சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சேர்த்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காண்கிறார்கள். 5 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கிறார்கள்.

அதிமுக, திமுக, தவெக, சீமான், தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தனர்.. குறிப்பாக நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்..

இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி 26.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது

எனவே கடந்த தேர்தலில் ஒப்பிட்டால் இந்த தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது..
அடுத்த கட்டுரையில்
விஜய்க்கு ஓட்டு போடலாம்னு ஆசையா இருந்தோம்!. ஆனா முடியல!.. ரசிகர்கள் சோகம்..