1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nanguneri village people rejected the election

இரட்டைக் கொலை எதிரொலி!.. தேர்தலை புறக்கணித்த நாங்குநேரி கிராம மக்கள் ...

nanguneri
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிக்கிறது. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஒருவரும் வரவில்லை. அந்த கிராமத்தில் 969 வாக்காளர்கள் வசிக்கும் நிலையில் ஓட்டுப்போட ஒருவரும் வராத காரணத்தால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது..

கடந்த மார்ச் 2ம் தேதி அந்த பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த இருவ்வர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நாங்குநேரி கிராம நீதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அவர்களிடம் தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஒரே ஒரு பெண் மட்டும் வாக்களிப்பதற்கக வந்தார். ஆனால் அவரை அந்த கிராம மக்கள் ஓட்டு போட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.. ஆனால் அவர்களிடம் இருந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஓட்டு போட வைத்தனர். ஓட்டு போட்டுவிட்டு அந்த பெண் வெளியே வரும்போது அவரை நாங்குநேரி கிராமத்து மக்கள் தாக்கவும் முயற்சி செய்தனர்.. ஆனால் அவர்களிடம் அப்பெண்ணை காப்பாற்றி போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்..

அடுத்த கட்டுரையில்
தமிழக சட்டசபை தேர்தல்!. 11 மணி வரை 37.56 சதவீத வாக்குப்பதிவு...