ஞாயிறு, 1 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 மே 2018 (08:43 IST)

தூத்துகுடி துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

தூத்துகுடி துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் தூத்துகுடியில் இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
தூத்துகுடி துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
இந்த நிலையில் இன்றும் தூத்துகுடி பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. தூத்துகுடியில் அமைதி திரும்ப போலீசார்களுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.