திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 மே 2018 (13:43 IST)

காவல்துறையின் மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்: ரஜினிகாந்த்

கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் சீருடை அணிந்த காவல்துறையினர்களை தாக்குவது குறித்து கண்டனம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறையினர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை தற்போது கண்டித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியதாவது: தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் உளவுத்துறை, தமிழக அரசின் தோல்வியை காட்டுகிறது. காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயலை கண்டிக்கின்றேன். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் ஆல்ட்சியம், உளவுத்துறை உள்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது.
 
இந்த போராட்டத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மெரீனா போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காத காவல்துறையினர்களுக்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்த், திடீரென காவல்துறையை கண்டித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.