ஆட்சியை கவிழ்க்க திட்டம் போடுகிறாரா டிடிவி தினகரன்?!.. நடப்பது என்ன?...
2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. தமிழக அரசியல் திடீரென இப்படி மாறும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு விஜய் தமிழக முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார்.
விஜய்க்கு மக்கள் கொடுத்த ஆதரவையும், அவர் முதல்வர் ஆனதையும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே முதல்வர் விஜய் பற்றியும் தவெக ஆட்சி பற்றியும் அவர்கள் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக டிடிவி தினகரன் தொடர்ந்து தவெகவுக்கும், விஜய்க்கும் எதிராக பேசி வருகிறார். வெறும் ரீல்ஸை நம்பி மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறது.. தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுடிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. ஒருபக்கம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏக்களை கொண்டு சென்று விட்டார்கள் என்றெல்லாம் அவர் கூறி வருகிறார். அதோடு, அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரு எம்.எல்.ஏ.வும் விஜய்க்கு ஆதரவாக போய்விட்டது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே. எப்படியாவது தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இதற்காக அவர் பலரிடமும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.. தேர்தல் முடிவு வெளியானபோது தவெகவை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க டிடிவி தினகரன் பல முயற்சிகளையும் எடுத்தார்.
குறிப்பாக திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்தது, திருமாவளவனை முதல்வராகுவது, சௌமியா அன்புமணி துணை முதல்வராக்குவது என பல திட்டங்களுக்கு பின்னால் டிடிவி தினகரன் இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. தற்போது மீண்டும் அது போன்ற முயற்சிகளில் அவர் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது..