தொடர்புடைய செய்திகள்
- குருமூர்த்திக்கு கிங் மேக்கர்னு நினப்பு... ஜெயகுமார் நக்கல்!!
- அவர்களை மாஃபியாவாகவே கருதுகிறேன் – குருமூர்த்தி விளக்கம்!
- திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்: அரசியல் அட்டாக்கில் குருமூர்த்தி!!
- திமுக அழியப்போகிற கட்சி: துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!
- சீமானை கடுப்பாக்கிய துக்ளக் தர்பார் – நேரடி விளக்கம் தந்த பார்த்திபன்
குருமூர்த்தியின் வார்த்தைகள் சோ பெயருக்கு களங்கம்: டிடிவி தினகரன்
சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் சசிகலா குறித்து துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த திரு. சோ அவர்கள், தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.
அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் திரு. குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல. துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
