பிப்ரவரி 8 முதல் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படுமா?

WhatsApp
பிப்ரவரி 8 முதல் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படுமா?
siva| Last Updated: சனி, 16 ஜனவரி 2021 (13:57 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் திடீரென சில நிபந்தனைகளை விதித்தால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய நிபந்தனைகளுக்கு அதை பயன்படுத்தி வரும் மில்லியன் கணக்கான ஒரு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு வாட்ஸ் அப் சேவை பிப்ரவரி எட்டாம் தேதியுடன் நிறுத்தி வைக்கப்படும் என்று வாட்ஸ்-அப் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது
ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி புதிய நிபந்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று யாருடைய வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்து புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் பிப்ரவரி 8 முதல் தொடர்ந்து வாட்ஸ்அப் இயங்கும் என்பது உறுதியாகியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :